ETV Bharat / bharat

எமனாக வந்த ரயில்; ஸ்ரீகாகுளம் தண்டவாளத்தில் ஐவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன? - ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பத்துவா என்ற இடத்தில் ரயில் விபத்து

தொழில்நுட்பக் கோளாறால் ரயில் நின்றபோது, பயணிகள் ​​ரயிலில் இருந்து அருகில் உள்ள ரயில் பாதையில் இறங்கினர். அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்த பயணிகள் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Five died in Srikakulam train accident  ஸ்ரீகாகுளம் ரயில் விபத்து : தண்டவாளத்தில் நின்ற பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதி  5 பேர் பலி

author img

By

Published : Apr 12, 2022, 8:44 AM IST

Updated : Apr 12, 2022, 12:01 PM IST

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பத்துவா என்ற இடத்தில் நேற்று (ஏப்.11) இரவு கவுகாத்தி செல்லும் அதிவிரைவு வண்டி பாதியில் நின்றபோது, ​​ரயிலில் இருந்த பயணிகள் சிலர் அருகில் உள்ள ரயில் பாதையில் இறங்கி நின்றனர்.

அப்போது எதிரே வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் பயணிகள் மீது மோதியது. இதில் 5 பயணிகள் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைக்கண்டு ரயிலிலிருந்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர் உடல்களை மீட்டு அதே இரயிலில் ஸ்ரீகாகுளம் ரயில் நிலையத்திற்குக் கொண்டுவந்தனர். அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பின்னணி: கோவையில் இருந்து சில்சர் செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் சீப்புருபள்ளியை கடந்த போது ரயில் வண்டியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதனையடுத்து, பயந்துபோன சிலர் கீழே இறங்கி அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றனர். அதே நேரத்தில் புவனேஸ்வரில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வேகமாக வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில் நிகழ்வித்திலேயே 5 பேர் பலியாகினர். இதில், இருவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் ஒடிசாவின் பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த பயணி என்றும் அடையாளம் காணப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து ஸ்ரீகாகுளம் காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "கவுகாத்தி எக்ஸ்பிரஸில் யாரோ செயினை இழுத்து போது ரயில் நின்றது. இதனையடுத்து, ஐந்து பேர் இறங்கி தண்டவாளத்தைக் கடக்கும் போது, ​​பக்கத்து தண்டவாளத்தில் எதிர்த்திசையில் வந்த கோனார்க் எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 5 இறந்தனர்" எனத் தெரிவித்தனர்.

மேலும், “காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீகாகுளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார். இதனிடையே, ஸ்ரீகாகுளம் கலெக்டர் மருத்துவமனைக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தார்.

மேலும், ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பயணிகளின் மரணம் குறித்து வேதனை தெரிவித்ததோடு, நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 1,300 அடி உயரத்தில் மோதிக்கொண்ட கேபிள் கார்கள்... உயிருக்கு போராடிய 48 பேர்...

Last Updated : Apr 12, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.