புதுடெல்லி: இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (ஜூன். 20) முதல் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோவிஷீல்டு கரோனா தொற்றுக்கு எதிராக உள்நாட்டில் தயாராகும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசரகால அனுமதி வழங்கியது.
கடந்த மாதம் இரு கட்டங்களாக ஐதராபாத், விசாகபட்டினத்திற்கு ’’ஸ்புட்னிக் – வி’’ தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. அதுமட்டுமல்லாமல், மூன்றாம் கட்டமாக 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் வாயிலாக சமீபத்தில் ஐதராபாத் வந்தடைந்தது.
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் 1,145 ரூபாய்க்கு தடுப்பூசி இன்று மக்களுக்கு செலுத்தப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ரஷ்ய கோவிட் 19 தடுப்பூசி ’ஸ்பூட்னிக் வி’ , மதுகர் ரெடயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் தாமதமாகிவிட்டதாக மருத்துவர்கள் இன்று (ஜூன். 20) தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவர்கள் கூறுகையில் '' மருத்துவமனைக்கு இன்று முதல் ஸ்பூட்னிக் வி ஜாப்களை வழங்கப்படும். தற்போது, தடுப்பூசி தாமதமானது. வருகிற ஜூன். 25 ஆம் தேதி அன்றுதான் இரண்டாவது ரோஸ் வழங்கப்படும்’’ என தெரிவித்தனர் .
இதையும் படிங்க: ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கிறது சீரம் நிறுவனம்