நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகிவரும் நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் நிபுணர் குழுவின்,அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி, கரோனா தடுப்பூசி விநியோகத்தின் முதலாம் கட்ட பணி தொடங்கியது.
தற்போது, கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட விநியோக பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 10,45,28,565 தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.