உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான கொலிஜியம் அமைப்பின் ஒன்பது பேர் கொண்ட பரிந்துரை பட்டியல் ஊடகங்களில் இன்று வெளியாகின.
ஊடகங்களின் இந்த உறுதியற்ற செய்திகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி கருத்து
உச்ச நீதிமன்ற நீதிபதி நவீன் சின்ஹாவின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற தலைமை நீதிபதி ரமணா, இந்நிகழ்வில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "இந்நேரத்தில் ஊடகத்தில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் குறித்து எனது கவலையை தெரிவிக்க விரும்புகிறேன். நீதிபதிகள் நியமனம் தொடர்பான செயல்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
உரிய முறையில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். நீதிபதிகள் நியமனம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். அது கண்ணியம் மிக்கது. எனவே ஊடக நண்பர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்பாடுகளால் திறன்வாய்ந்த பலர் தங்கள் துறையில் வெற்றிபெற முடியாமல் போகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது. எனவே ஊடகத்துறையினர் பொறுப்பை உணர்ந்து கண்ணியத்தை நிலை நாட்ட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசி தரூர் விடுவிப்பு