ETV Bharat / bharat

சிறையில் சொகுசு வழக்கு: சசிகலாவுக்கு ஜாமீன்

சிறையில் சொகுசு வசதிகளை செய்துதர சிறை அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில், இருவருக்கு பிணை வழங்கி பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

special treatment case Sasikala
special treatment case Sasikala
author img

By

Published : Mar 11, 2022, 6:03 PM IST

Updated : Mar 11, 2022, 6:28 PM IST

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, சசிகலா கடந்தாண்டு ஜனவரி 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனார்.

அவர் சிறையில் இருந்தபோது, தங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்க வேண்டி சிறை அலுவலர்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் அளித்தார். இதையடுத்து, 2018இல் கர்நாடக அரசு இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் வினய்குமார் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக 245 பக்க அளவில் அறிக்கை தாக்கல் செய்தது.

மேலும், பெங்களூருவில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் சசிகலா, இளவரசி, சிறை அலுவலர் கஜராஜூ, சுரேஷ் மற்றும் இரண்டு அலுவலர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சசிகலா, இளவரசி, கஜராஜூ, சுரேஷ் ஆகியோர் ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 10) ஆஜராகினர்.

இந்நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் இன்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு சிறை அலுவலர்கள் ரூ. 5 லட்சம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு பிணை வழங்கியுள்ளது. மேலும், அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க: இளவரசியின் மருமகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Last Updated : Mar 11, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.