திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காரைக்காமண்டபம் அருகில் பிரதீப் என்ற ஊடகவியலாளர் ஒருவர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவர், தனக்குப் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநரைத் தேடிவருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத காரணத்தால் விபத்து குறித்து விசாரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கேரள அரசு இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த உ.பி. பத்திரிகையாளர்