டெல்லி: இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அவரது 30 பேர் கொண்ட அடிப்படைக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான பிரஜ்வால் பாண்டே இணைக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள சிந்திரியில் வசித்து வரும் பிரஜ்வால் ரிஷி சுனக்கின் ’கன்செர்வேடிவ் கட்சி(Conservative party)' -யில் உறுப்பினராகியுள்ளார். மேலும், பிரிட்டனின் இளைஞர்கள் பாராளுமன்றத்திற்கும் பெரும் வாக்குகள் பெற்று உறுப்பினராக கடந்த 2019ஆம் ஆண்டு தனக்கு 16 வயதே ஆன போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரஜ்வாலின் தந்தை ராஜேஷ் பாண்டே பிரிட்டனின் பாதுகாப்பு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். அவரது தாத்தா பகிஷ் தட் பாண்டே ஜார்கண்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
பெங்களூரூவில் பிறந்த பிரஜ்வால் பிரிட்டன் பிரதமர் தேர்தலுக்கு முன் கன்செர்வேடிவ் கட்சியின் அடிப்படை கமிட்டியின் உறுப்பினராக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு கெல்ம்ஸ்ஃபோர்டு இளைஞர்கள் திட்டக் குழுவில் துணைத் தலைவராகவும், 2020இல் எஸ்ஸெக்ஸ் பருவகால செயல் ஆணையத்திலும் இணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே 2ஆவது மிகப்பெரியது - பிரதமர் மோடி