ETV Bharat / bharat

Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா? - நாடாளுமன்றம்

நாடளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Parliament
Parliament
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 7:24 AM IST

டெல்லி : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இந்த சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நேற்று (செப். 17) நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அது தவிர வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட் மசோதாக்களும் மக்களவை நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டு உள்ளன. முன்னதாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதையடுத்து நிகழ்ச்சி நிரல்கள் குறித்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம், அரசியல் சாசன அமர்வு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக நேற்று (செப். 17) நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

அந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகள் சிறப்பு கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், விலைவாசி உயர்வு, வேலையின்மை, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ‘இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்’ - முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.