கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஆவடி கமெண்டண்ட் பாலகிருஷ்ணன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பி கிங்ஸ்லின், விழுப்புரம் தலைமையக கூடுதல் எஸ்பி திருமால், திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் எஸ்பி முத்துமாணிக்கம், நாமக்கல் மாவட்ட கூடுதல் எஸ்பி சந்திரமௌலி ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டிஜிபி கூறியுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக யூடியூப் சேனல்களில் தவறான வதந்தியை ஒளிபரப்பிய நபர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களின் யூடியூப் சேனலை முடக்கவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சான்றிதழ் இழந்த பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்