ETV Bharat / bharat

பிப்.3-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை; சபாநாயகர் தகவல்! - புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 3-ம் தேதி கூடுவதாகவும், மார்ச் மாதம் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் எனவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பிப்.,3 ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை; சபாநாயகர் தகவல்

author img

By

Published : Jan 24, 2023, 4:28 PM IST

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 3-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் என முடிவு செய்யும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு குளிர்கால கூட்டமாக சபை கூட்டப்படுகிறது.

வரும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் இம்முறை தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். புதுவையில் பணியாற்றும் 90 சதவீத அதிகாரிகள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர். ஒரு சில அதிகாரிகள் ஒத்துழைப்புத் தருவதில்லை. அவர்கள் மீது வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நிதி அளிக்கிறது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு வராமல், அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஜல்சக்தி திட்டத்தில் மத்திய அரசு ரூ.33 கோடி நிதி புதுவைக்கு ஒதுக்கியது. இதில் ரூ.1 கோடியை மட்டும் செலவு செய்து மீதியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதேபோல ஊரக வளர்ச்சி முகமையில் பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் தார்சாலைகள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. புதுவையில் இதற்கானப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதுதொடர்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மாற்றிய பிறகு தற்போது ரூ.48 கோடியில் 125 கி.மீ. தார்சாலைகள் அமைக்கப்படுகிறது.

புதுவையில் 108 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. ஆனால், 10 கிராம பஞ்சாயத்து இருப்பதுபோல மத்திய அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர். இந்த கிராமங்களுக்கு மட்டும்தான் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவற்றையெல்லாம் திருத்தியமைத்து வருகிறோம்.

நிதியை செலவிடாமல் இருந்ததற்கு எல்லாம் தலைமைச்செயலர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிக ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதால் அதன் எண்ணிக்கையை குறைக்கவும் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி அரசு தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பதுதான் சபாநாயகரின் கடமை' என்றார்.

இதையும் படிங்க: Viral Vedio: பிறந்த குழந்தையை விற்க பேரம் பேசும் மருத்துவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.