டெல்லி : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (டிச. 13) வழக்கம் போல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது.
தொடர்ந்து அவை இயங்கிக் கொண்டு இருந்த போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அவைக்குள் இரண்டு பேர் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.பி.க்கள் இருக்கைகள் மீது தாவிக் குதித்தும், அங்கும் இங்கும் ஓடியும் உறுப்பினர்களுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தனர்.
-
Leaders of political parties met Lok Sabha Speaker on today's security breach incident. The Speaker told MPs that he agreed with their concerns related to security and that the security would be reviewed. The Secretary General of Lok Sabha has written to the Ministry of Home…
— ANI (@ANI) December 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Leaders of political parties met Lok Sabha Speaker on today's security breach incident. The Speaker told MPs that he agreed with their concerns related to security and that the security would be reviewed. The Secretary General of Lok Sabha has written to the Ministry of Home…
— ANI (@ANI) December 13, 2023Leaders of political parties met Lok Sabha Speaker on today's security breach incident. The Speaker told MPs that he agreed with their concerns related to security and that the security would be reviewed. The Secretary General of Lok Sabha has written to the Ministry of Home…
— ANI (@ANI) December 13, 2023
தொடர்ந்து கையில் இருந்து மர்ம கருவிகளை எம்.பிக்களை நோக்கி வீசினர். அதில் இருந்து வண்ண புகைகள் கிளம்பின. இதையடுத்து, இருவரையும் சுற்றிவளைத்து பிடித்த எம்.பிக்கள் அவர்களை அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசி கூச்சலில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரை பாதுகாவலர்கள் பிடித்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி உள்ளே நுழைந்து களேபரத்தில் ஈடுபட்ட இருவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வளாகம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான எம்.பிக்களின் கவலைகளை அவர் ஒப்புக்கொண்டதாகவும், பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
மேலும், மக்களவையின் பொதுச் செயலர், பாதுகாப்பு மறுஆய்வு குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர் பகுதிக்கு யாரும் நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். எம்.பி.க்களின் தனிப்பட்ட உதவியாளர்களிடம் உள்ள பார்வையாளர்கள் நுழைவு அனுமதி சீட்டை சபாநாயகர் ஓம் பிர்லா பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரம் - 6 பேருக்கு தொடர்பு? போலீசார் வலைவீச்சு!