ETV Bharat / bharat

"சூரியனை ஆய்வு செய்வது மிக முக்கியம்": ஆதித்யா-எல்1 பற்றி விண்வெளி ஆய்வாளர் கூறிய சுவாரஸ்ய தகவல்! - சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம்

AdityaL1 Mission: சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால் சூரியனை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம் என்றும், ஆதித்யா-எல்1 விண்கலத்தை எல்1 புள்ளியில் நிலைநிறுத்து வதன் மூலம் எந்தவித இடையூறும் இல்லாமல் சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய முடியும் என்றும் விண்வெளி ஆய்வாளரான கிரிஷ் லிங்கண்ணா தெரிவித்துள்ளார்.

space
space
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 12:11 PM IST

Updated : Aug 29, 2023, 1:07 PM IST

பெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் கடந்த 23ஆம் தேதி திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது. சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து இந்தியா வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. நிலவில் தரையிறங்கிய லேண்டரும், ரோவரும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்து வருகின்றன.

சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இஸ்ரோ நீண்ட காலமாக இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக "ஆதித்யா-எல்1" (Aditya-L1) என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் செப்டம்பர் 2-ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி XL ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாகவும், இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே லெக்ராஞ்சியன் என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. லெக்ராஞ்சியன் (எல்1) புள்ளியிலிருந்து சூரியனை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலம் தொடர்பாக, விண்வெளி ஆய்வாளரான கிரிஷ் லிங்கண்ணா ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஆதித்யா-எல்1 விண்கலம் ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு செய்யும். அது சூரியனைப் புகைப்படங்கள் எடுக்கும். சூரியனிலிருந்து கனிசமான தொலைவில் உள்ள புள்ளியில்தான் விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது. விண்கலத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஏழு நவீன கருவிகள் உள்ளன. சூரியனின் மேற்பரப்பையும், சூரியன் வெளியிடும் வெப்பம், காற்று போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும் எல்1 புள்ளி, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புள்ளியில் பூமி மற்றும் சூரியன் இரண்டின் ஆற்றலும் சமநிலையில் இருக்கும். அதனால், இந்த சமநிலைப் புள்ளி செயற்கைக்கோளை நிலைநிறுத்த உதவியாக இருக்கும். பூமியை நோக்கி வரும் புயல்களைப் பற்றி தெரிந்து கொள்ள சூரியனை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பூமியை நோக்கி வரும் ஒவ்வொரு புயலும் எல்1 புள்ளி வழியாகவே செல்லும். அதனால், அந்த புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தினால் எந்தவித இடையூறும் இல்லாமல் சூரியனைக் கண்காணிக்க முடியும். சூரியனின் வெப்பநிலை உள்ளிட்ட அனைத்து மாற்றங்களும் முழு சூரியக் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதால், சூரியனைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் சுமூகமாக நடந்து வருகிறது. விண்கலத்தின் இறுதிகட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. செயற்கைக்கோள், தொழில்நுட்பக் கருவிகள், ராக்கெட்டின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: Aditya-L1 launch: சந்திரனை தொடர்ந்து சூரியனில் ஆய்வு: விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ஆதித்யா-எல்1.!

Last Updated : Aug 29, 2023, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.