கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று (ஜன.2) மாரடைப்பு காரணமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ரத்த குழாயினை விரிவுபடுத்துவற்காக முதற்கட்டமாக ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றும், உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்து அழுத்தம் 110/70 ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், "கங்குலிக்கு மற்றொரு ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டியுள்ளது. அவரது உடல்நிலையை பொறுத்தே அது மேற்கொள்ளப்படும். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி