ETV Bharat / bharat

ராஜிவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி, சோனியா, பிரியங்கா மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம்
former PM Rajiv Gandhi on his 31st death anniversary ராஜீவ் காந்தி நினைவு தினம்
author img

By

Published : May 21, 2022, 10:33 AM IST

Updated : Jun 27, 2022, 1:08 PM IST

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புத்தூரில் தேர்தல் பரப்புரைக்கு வந்த இடத்தில் நடந்த மனித குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரின் 31ஆவது நினைவுநாள் இன்று (மே 21) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி நினைவு தினம் : சோனியா, பிரியங்கா மரியாதை

இந்நிலையில், ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், சச்சின் பைலட் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

  • कांग्रेस अध्यक्ष श्रीमती सोनिया गांधी जी, महासचिव श्रीमती @priyankagandhi जी व वरिष्ठ कांग्रेस नेताओं ने पूर्व प्रधानमंत्री राजीव गांधी जी की पुण्यतिथि पर समाधि स्थल वीरभूमि पहुंच कर उन्हें श्रद्धांजलि अर्पित की।

    राष्ट्र निर्माण में राजीव गांधी जी का योगदान अविस्मरणीय है। pic.twitter.com/Go408CWKzM

    — Congress (@INCIndia) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், "நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், லண்டனில் நடந்த 'ஐடியாஸ் ஃபார் இந்தியா' மாநாட்டில் ராகுல் காந்தி உரை நிகழ்த்த சென்றுள்ளதால், ராகுல் அஞ்சலி இன்று செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • On his death anniversary, paying tributes to our former Prime Minister Shri Rajiv Gandhi.

    — Narendra Modi (@narendramodi) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: 'எனது தந்தை எனக்குக் கொடுத்த பரிசு' - கடைசி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா காந்தி

Last Updated : Jun 27, 2022, 1:08 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.