ETV Bharat / bharat

'பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும்' - பிரதமருக்கு சோனியா கடிதம் - பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா கடிதம்
சோனியா கடிதம்
author img

By

Published : May 20, 2021, 6:22 PM IST

கோவிட்-19 இரண்டாம் அலை தாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், "மக்களிடையே பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. தொற்று பாதிப்பால் இளம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழக்கும் அவல நிலைக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

அவர்களின் கல்வியும் எதிர்காலமும் இதனால் கேள்விக்குறியாகிறது. எனது கனவர் ராஜீவ் காந்தியின் கனவு முயற்சியான நவோதயா கல்விக் கூடங்கள் நாடு முழுவதும் 661 உள்ளன. இந்தப் பள்ளிகளை அதிகரித்து அவற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

இந்தப் பேரிடர் காலத்தில் மீளாத் துயரத்தை சந்தித்துள்ள இந்தக் குழந்தைகளுக்கு நாடும் அரசும் மேற்கொள்ள வேண்டிய தலையாய கடமை இது" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரள முதலமைச்சரை பாராட்டிய மோடி; மாநிலங்கள் தடுப்பூசி வீணாவதைத் தவிர்க்க அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.