ETV Bharat / bharat

கரோனா பரவல்: காங். ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

author img

By

Published : Apr 10, 2021, 7:45 AM IST

டெல்லி: காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டார். இதில், கோவிட்-19 நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

Sonia Gandhi
Sonia Gandhi

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் கோவிட்-19 நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

அப்போது, சோனியா காந்தி இச்சமயத்தில் பொதுமக்களுக்கு நாம் உதவ முன்வர வேண்டும் என அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்ரகாண்ட், சத்தீஸ்கர், பிகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இதனை விரைந்து களைந்து உரிய அளவிலான தடுப்பூசிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கூட்டம் முடிந்தபின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.