டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நடைபெற்ற மதிய விருந்தில் கலந்து கொண்ட அரியானாவைச் சேர்ந்த பெண்கள், ராகுல் காந்தியை விரைந்து திருமணம் செய்து கொள்ளச் சொல்லுமாறு சோனியாவிடம் கேட்டுக் கொண்ட சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த ஜூலை 8ஆம் தேதி டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு அரியானா மாநிலம் வழியாக சென்று கொண்டு இருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள சோனிபட் மாவட்டம் மதினா கிராமத்திற்கு திடீரென சென்றார். அங்கு விவசாயிகள் நடவு பணிக்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த நிலையில் அவர்களுடன் கலந்துரையாடி தானும் வயல் வெளியில் இறங்கி நடவு பணியில் ஈடுபட்டார்.
மேலும், டிராக்டர் ஒட்டியும் ராகுல் காந்தி மகிழ்ந்தார். விவசாயிகளிடம் கலந்துரையாடிய போது, அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக உறுதி அளித்து உள்ளார். இந்நிலையில், கிராமத்தை பெண்கள் அனைவரையும் தனது தாயார் சோனியா காந்தி வீட்டிற்கு ராகுல் காந்தி டெல்லி அழைத்துச் சென்றார்.
டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் ஜன்பாத் இல்லத்திற்கு கிராமத்து பெண்களை அழைத்து சென்ற ராகுல் காந்தி, அனைவருக்கும் மதிய விருந்து கொடுத்தார். தொடர்ந்து அனைவருடனும் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துரையாடினர். அப்போது ஒரு பெண்மணி, சோனியா காந்தியை நோக்கி, விரைவாக ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள சொல்லுங்கள் என்று கூறினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த சோனியா காந்தி, தனது மகனுக்கு நீங்களே பெண் பார்த்து சொல்லுங்களேன் என்று கூறி உள்ளார். உடனடியாக அது விரைவில் நடக்கும் என ராகுல் காந்தி கூறியது அந்த இடத்தையே கலகலக்கச் செய்தது. ராகுல் காந்தி தன்னை விட அதிகம் குறும்புக்கார குணம் கொண்டவர் என பிரியங்கா காந்தி கூறியது, அங்கு மேலும் சிரிப்பலையை அதிகப்படுத்தியது.
கிராமத்து பெண்களுடன் கலந்துரையாடிய பிரியங்கா காந்தி அனைவரையும் தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, சில சிறப்பு விருந்தினர்களுடன் அம்மா, பிரியங்கா என தனக்கு நினைவில் கொள்ள வேண்டிய நாளாக மாறியது என்று பதிவிட்டு உள்ளார்.
-
मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
">मां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBkमां, प्रियंका और मेरे लिए एक यादगार दिन, कुछ खास मेहमानों के साथ!
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2023
सोनीपत की किसान बहनों का दिल्ली दर्शन, उनके साथ घर पर खाना, और खूब सारी मज़ेदार बातें।
साथ मिले अनमोल तोहफे - देसी घी, मीठी लस्सी, घर का अचार और ढेर सारा प्यार।
पूरा वीडियो यूट्यूब पर:https://t.co/2rATB9CQoz pic.twitter.com/8ptZuUSDBk
சோனிபட் கிராமத்து விவசாய சகோதரிகள் டெல்லிக்கு வந்த்து, அவர்களுடன் வீட்டில் மதிய உணவு மற்றும் நிறைய பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களிடம் இருந்து நெய், இனிப்பு லஸ்ஸி, வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் மற்றும் நிறைய அன்பு என விலைமதிப்பற்ற பரிசுகள் கிடைத்தன என ராகுல் காந்தி அந்த வீடியோ பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு!