டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஜூன் 2ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மூக்கிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாள்களில் வீடு திரும்புவார் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் 8 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 20) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். சில நாள்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு டெல்லி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இவருக்கு கரோனா ஏற்பட்டதால், ஜூன் 23ஆம் தேதி ஆஜராகுமாறு மறு சம்மன் அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" - மோடி