கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டத்தில், தனது தாயை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்ற மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது வன்மத்தைத் தீர்த்துக் கொண்ட பின்னர், தனது தாயைக் கொலை செய்து சடலத்தை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் மகனே தாயைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் 21 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
கைதான இளைஞரின் தந்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். தன்னுடன் வசித்து வந்த தாய் வேறோரு ஆணுடனும் பழகி வந்ததை விரும்பாத இளைஞர், அவரை வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையும் படிங்க:தம்பிக்கு விரித்த வலையில் சிக்கிய அண்ணன்! கும்பல் வெறிச்செயல்!