ஆக்ரா (உத்தரப் பிரதேசம்): தாஜ்நாக்ரி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மகன், மொபைல் ஃபோனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். இதற்காக தனது தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் செலுத்தி விளையாடி வந்துள்ளார். முதலில் குறைந்த தொகை செலுத்தி விளையாடியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய நிலையில், ஆட்டோ மோட் முறையில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் தந்தை தன் சொந்த தேவைக்காக பணம் எடுக்கச்சென்ற நிலையில், ரூ.39 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஆக்ரா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், ஆன்லைன் கேம் விளையாடியதன் மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது