ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா செக்டாா் பகுதியில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்குள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி ஷெல்களைக் கொண்டு தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில், ராணுவ வீரர் ரவீந்தர் உயிரிழந்தார்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் படையினரின் தாக்குதலை அடுத்து, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ராணுவத்தால் அனுப்பிவைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டில் பாகிஸ்தானால் ஜம்மு-காஷ்மீரில் 5,100 யுத்த நிறுத்த மீறல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த யுத்த நிறுத்த மீறல்களால், 24 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானிய படைகள் மக்கள் மத்தியில் அச்ச மனநிலையை உருவாக்குவதற்கும், எல்லைகளில் நிலவும் அமைதியை சீர்குலைப்பதற்கும் மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சட்டப்பேரவையைக் கூட்டுமாறு ஆளுநருக்கு கேரள அரசு பரிந்துரை!