ஜஜ்பூர்: ஒடிசா மாநிலம், ஜஜ்பூர் மாவட்டத்தில் ஷாலிஜங்கா அருகேயுள்ள கம்பாரிபாடியா என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிஷோர் பத்ரா.
இவர் விவசாய வேலையை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்தது. வலியால் துடித்த பத்ரா விறுவிறுவென சென்று தன்னை கடித்த பாம்பை தேடினார்.
இந்நிலையில் பாம்பை பிடித்த பத்ரா, சற்றும் தாமதிக்காமல் தனது பல்லால் கடித்தே கொன்றார். இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: 'ஜம்முவில் பாஜக பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம்'