டெல்லி: ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. இவர் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிவேற்றி இருந்தார்.
அந்தப் படம் தற்போது வைரலாகிவருகிறது.
அந்தப் படத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுடிதார் அணிந்துகொண்டு பூ பறித்துக்கொண்டிருக்கிறார். அவரின் கைகள் பூவை தொடுகின்றன.
இந்தப் படங்களை பார்த்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஏனெனில் அவர் புகைப்படத்தில் மெலிந்த தேகத்துடன் காணப்படுகிறார்.
இந்தப் படத்தை பார்த்து நாகினி தொடர் நடிகையும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னாள் தொலைக்காட்சி நடிகையான ஸ்மிருதி இரானி, பாஜகவில் இணைந்து ஒன்றிய அமைச்சர் ஆனார்.
தொடர்ந்து இவர் சமூக வலைதளங்களில் பிஸியாக செயல்பட்டுவருகிறார்.
இதற்கிடையில் அவர் எடைக் குறைப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறார்.
இதையும் படிங்க: Viral photo: சிங்கத்துடன் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிகள்: வலுக்கும் எதிர்ப்பு