ETV Bharat / bharat

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கான சில ஸ்மார்ட் டிப்ஸ்!

நம்மில் பெரும்பாலானோர் தற்போது கிரேடிட் கார்டுகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம் என்றே கூறலாம், அதனை எவ்வாறு உபயோகமாக பயன்படுத்துவது என வல்லுநர்கள் கூறும் சில ஸ்மார்ட் டிப்ஸ்களைப் பார்க்கலாம்.

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கான சில ஸ்மார்ட் டிப்ஸ்

author img

By

Published : Oct 24, 2022, 10:45 PM IST

ஹைதராபாத்: கிரெடிட் கார்டுகளில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். கிரெடிட் கார்டுகளுக்கு 5 முதல் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழலில், அவற்றைப்பயன்படுத்தும்போது சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அதில் ஒரு சில குறிப்புகளை பார்க்கலாம்.

உங்கள் கார்டை அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் கார்டில் உள்ள கடன் வரம்பு என்ன? நீங்கள் அதை எவ்வளவு பயன்படுத்தியுள்ளீர்கள்? பில் செலுத்த வேண்டியதொகை எவ்வளவு? இவை அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புதியதாக பொருட்கள் வாங்குவதற்கு முன் ரிவார்ட் புள்ளிகள் மற்றும் பில்லிங் நிலுவைத் தேதிகளைப் பார்க்கவும். அப்போதுதான், எந்த அட்டையைப் பயன்படுத்த வேண்டும், எவ்வளவு தொகையைச் செலவிட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

முதல் கட்டமாக: வழக்கமாக, கிரெடிட் கார்டில் பொருள் வாங்கிய பிறகு, பணத்தைத் திருப்பிச் செலுத்த 30 முதல் 40 நாட்கள் வரை, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பில்லிங் தேதியின் தொடக்கத்தில் கார்டைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த நன்மையைப் பெற முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் பில்லிங் தேதி 8ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம், அப்படியெனில் நீங்கள் 9 மற்றும் 15ஆம் தேதிக்கு இடையில் வாங்கினால் உங்களுக்கு டைம் அட்வாண்டேஜ் கிடைக்கும்.

தள்ளுபடிகளைத் தவறவிடாதீர்கள்: சில பிராண்டுகள் கிரெடிட் கார்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளன, இவை வழக்கமான தள்ளுபடிகளைத் தாண்டி சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகின்றன. இது பெரும்பாலும் திருவிழாக்காலங்களில் கிடைக்கும். இரண்டு அல்லது மூன்று கார்டுகளை வைத்திருப்பவர்கள், எந்த அட்டையில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.

வெகுமதி புள்ளிகள்(reward points): கிரெடிட் கார்டுகளால் வழங்கப்படும் வெகுமதி புள்ளிகளை ஒருவர் கண்காணிக்க வேண்டும். பொருட்கள் வாங்கும்போது அவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க வேண்டாம். இந்தப் புள்ளிகள் உங்களுக்கு பணத்தை திரும்பப்பெற உதவுமா? அதைப் பாருங்கள். உங்களுக்கு இது பற்றி அதிகம் தெரியாவிட்டால், கார்டு வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அனைத்து விவரங்களையும் பெறவும். பொருட்கள் வாங்கும்போதே அதிக ரிவார்டு புள்ளிகளைப் பெறும் கார்டைப் பயன்படுத்துவது நல்லது.

இஎம்ஐ(EMI) கள்: பல கிரெடிட் கார்டுகள் கட்டணமில்லா EMIகளை வழங்குகின்றன. உங்களிடம் போதுமான பணம் இல்லை என்றால், இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அத்தகைய நேரங்களில், நீங்கள் சில தள்ளுபடிகளை கைவிட வேண்டி இருக்கும். அதேசமயம், சில கார்டுகள் தள்ளுபடிகள் மற்றும் இலவச EMIகளையும் சேர்த்து வழங்குகின்றன.

மேலும், எந்தச்சூழ்நிலையிலும் உங்கள் கார்டு வரம்பில் 30-40 விழுக்காட்டிற்கு மேல் செலவழிக்கவில்லை என்பதை உறுதி செய்து, சரியான நேரத்தில் பில்களை செலுத்துங்கள். நிலுவைத் தொகையை வைத்திருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும். பண்டிகைக்காலத்தில் கிரெடிட் கார்டுகளை கவனமாகப் பயன்படுத்தினால், நீங்கள் பலனடைவீர்கள் என்கிறார், பேங்க் பஜாரின் தலைமை நிர்வாக அலுவலர், ஆதில் ஷெட்டி.

இதையும் படிங்க: எதிர்பாராத செலவினங்களை தவிர்க்க மருத்துவ காப்பீடு செய்யுங்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.