ETV Bharat / bharat

'மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சராகிவிடலாம்': புதுச்சேரி CM-ன் பலே பதில் - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சராகி விடலாம் என்று தன்னை சந்தித்த 4ஆம் வகுப்பு சிறுவனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

small boy meet puducheery cm  puducheery news  puducheery latest news  puducheery cm rangasamy  புதுச்சேரி செய்திகள்  புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த சிறுவன்  புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த சிறுவன்  புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  புதுச்சேரி முதலமைச்சர்
புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த சிறுவன்
author img

By

Published : Aug 2, 2021, 8:56 PM IST

Updated : Aug 2, 2021, 9:22 PM IST

புதுச்சேரி: மக்களோடு மக்களாகப் பழகக்கூடிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தன்னை நாடுபவர்களுக்கு தேவையறிந்து உதவி செய்து வருகிறார்.

அவரது ஆட்சிக்காலங்களில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதும், முதியோர்களுக்கு பென்சன் உயர்த்தி வழங்குவதும் போன்ற உதவிகளை செய்துள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்துள்ளார். சாதாரண மக்கள் கூட அவரை எளிதாக சந்தித்துப் பேச முடியும்.

தேவையான உதவிகளை செய்யவேண்டும்

புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த சிறுவன்

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 1) புதுச்சேரி கடைவீதியில் தனது நண்பரின் கடையில் இருந்த புதுச்சேரி முதலமைச்சரிடம், வெங்கட்டா நகரைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படித்து வரும் வியன், பேசி மகிழ்ந்து உள்ளார்.

அப்போது 'அவரிடம் முதலமைச்சராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்' என சிறுவன் கேட்டுள்ளார்.

அதற்கு "மக்களோடு மக்களாகப் பழக வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவியை செய்யவேண்டும். நம்மால் எவ்வளவு முடிகிறதோ... அவ்வளவு உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும்" என்று முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

கல்விக்கு முக்கியத்துவம்

முதலில் நன்றாகப் படிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சர் ஆகி விடலாம் என்றும் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ரங்கசாமி எப்போதும் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்றும், ஏழை மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளை அடையவேண்டும் என்றும் அடிக்கடி கூறி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்ருத் மஹோத்ஸவ்: நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு நரேந்திர மோடி பாராட்டு!

Last Updated : Aug 2, 2021, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.