ETV Bharat / bharat

உலக புகழ்பெற்ற தசாரா திருவிழா தொடக்கம்!

உலக புகழ்பெற்ற தசாரா திருவிழா வியாழக்கிழமை (அக்.7) காலை தொடங்கியது.

Mysuru Dasara
Mysuru Dasara
author img

By

Published : Oct 7, 2021, 4:18 PM IST

Updated : Oct 7, 2021, 4:31 PM IST

மைசூரு : உலக புகழ்பெற்ற மைசூரு தசாரா (2021) திருவிழாவை, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று தொடங்கிவைத்தார்.

மைசூரு திருவிழா கொண்டாட்டங்கள் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று காலை 8.26 மணிக்கு தொடங்கின. விழாவை முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தொடங்கிவைத்தார்.

Mysuru Dasara
மைசூரு தசாரா தொடக்கம்

10 நாள்கள் நடைபெறும் இந்த தசாரா விழா அக்டோபர் 15ஆம் தேதி நிறைவு பெறும். இது கர்நாடகாவில் மாநில விழாவாக நாடஹப்பா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இது மைசூருவில் நடைபெறும் 411ஆவது தசாரா விழாவாகும். தசாரா தொடக்க விழாவில் பேசிய எஸ்.எம். கிருஷ்ணா, “முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அனைத்து கோவிட் முன்னேற்பாடுகளுடன் மைசூரு தசாரா விழாவை கொண்டாட அனுமதியளித்துள்ளார். தசாரா, விஜயநகர பேரரசின் காலத்தில் தசரா விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

Mysuru Dasara
மைசூரு தசாரா தொடக்க விழாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

தசாரா விழாக்கள் காலம் காலமாக பல்வேறு மாற்றங்களுடன் கொண்டாடப்பட்டுவருகின்றன. இந்த மாற்றத்திற்கு திவான்கள் பொறுப்பு. அரசர்கள், ராணிகள் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தனர். அதற்கு சேலுவம்பா மருத்துவமனை ஒரு சான்று. பிரதமர் நரேந்திர மோடியை போன்று ஒருவரை நான் பார்த்ததில்லை. அவர் எந்நேரமும் நாட்டு மக்களை பற்றி சிந்திக்கிறார். நாட்டு மக்களுக்காக உழைக்கிறார். அவருக்கு சாமுண்டீஸ்வரி தேவி கூடுதல் பலம் அளிக்க வேண்டும்” என்றார்.

மேலும், “அடுத்தாண்டு முதல் தசாராவை சுற்றுலாவாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். தசாரா திருவிழாவில் சரஸ்வதி பூஜை அக்டோபர் 12ஆம் தேதியும், துர்காஷ்டமி 13, ஆயுத பூஜை 14, ஜம்பு சவாரி (யானை ஊர்வலம்) 15ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க : குலுங்கவே குலுங்காத பெங்களுரூ - மைசூரு ரயில்தடம்...!

Last Updated : Oct 7, 2021, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.