கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் கறுப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தோல் பூஞ்சை எனும் புதிய தொற்று கர்நாடக மாநிலம், சிக்கலாபுரா கிராமத்தில் 50 வயது ஒருவருக்கு உறுதியாகியுள்ளது.
இவர் முதலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் கரோனாவிலிருந்து அவர் குணமடைந்த நிலையில் தோல் பூஞ்சை எனும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது, "தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம். இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் இல்லை. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கண்டனம்!