திருச்சூர் : அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் வாழ்வாதாரம் தேடி தங்களது குடுமபத்தினருடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து உள்ளனர். புதுக்காடு பகுதியில் இரு குடும்பத்தினரும் தனித் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இரு குடும்பத்தினர் இடையே சுமூக உறவு நீடித்து வந்த நிலையில் நாட்கள் செல்லச் செல்ல சிறு விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு குடும்பத்தினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தன்று இரு தரப்பினரும் தங்களுக்கு அடிதடி தாக்குதல் நடத்தி உள்ளனர். கூர்மையான ஆயுதங்களை கொண்டு இரு தரப்பினரும் தங்களுக்குள் தாக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதில் உறவினரின் மகன் என்றும் பாராமல் 6 வயது சிறுவன் கத்தியால் கொடூரமாக தாக்கி குத்தி கொலைச் செய்யப்பட்டான். மேலும் சிறுவனின் தாய் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்த கிராம மக்கள் சண்டையை தடுத்து கத்திக் குத்தில் ஈடுபட்ட மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், சண்டையில் ஈடுபட்டவர்களை தடுத்தி நிறுத்தினர். மேலும் குடும்பத் தகராறில் குத்திக் கொல்லப்பட்ட அப்பாவி சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே சண்டையை தடுக்க வந்த ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சிறுவனை குத்தி கொலைச் செய்த நபரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ரயில்வே கேட்டை உடைத்து அலட்சியம் - கார் மீது ரயில் மோதி கோர விபத்து! - பயணிகள் நிலை?