ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சித்வா பகுதியில் இன்று(ஆகஸ்ட் 17) 2 குடியிருப்பு வீடுகளில் 6 அழுகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து சித்வாவின் தாவி விஹார் பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்பு வீடுகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலங்களைக் கைப்பற்றியதாக தலைமை காவல் அலுவலர் கூறினார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது எனவும், அவர்களது குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அலுவலர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஜம்மு அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறுகையில், ’கண்டெடுக்கப்பட்ட அனைத்து உடல்கள் மீதும் மருந்து போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மரணத்திற்கான சரியான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும். அவர்களது குடும்பத்தினர் வந்தவுடன் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்’ என்று கூறினார்.
இறந்தவர்கள் காஷ்மீரில் வசித்தவர்கள் என்பதும், அவர்கள் முறையே குலாம் ஹசனின் மனைவி சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ரூபினா பானோ, ஜாபர் அலி மற்றும் ஹபிபுல்லாவின் மகன் நூர்-உல்-ஹபீப் மற்றும் ஃபரூக் அகமது மக்ரேயின் மகன் சஜாத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:காஷ்மீரில் தீவிரவாதிகள் மறைவிடம் அழிப்பு