ETV Bharat / bharat

பெண்ணுடன் தகாத உறவை முறிக்க மறுப்பு - இளைஞர் கல்லால் அடித்துக்கொலை - cctv

பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவை முறித்துக் கொள்ள மறுத்த இளைஞரை, 3 பெண்கள் உள்பட 6 பேர் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் அடித்துக் கொலை
இளைஞர் அடித்துக் கொலை
author img

By

Published : Dec 6, 2022, 10:15 PM IST

கர்நாடகா: பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் தகாத உறவில் இருந்ததாக இளைஞர் 20 முறைக்கும் மேல் கல்லால் அடித்துக் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள மருந்தகத்துக்கு வந்த இளைஞனை பின் தொடர்ந்து 3 பெண் உள்பட 6 பேர் வந்துள்ளனர். இளைஞனிடம் 6 பேரும் பேசிக் கொண்டு இருந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், 6 பேரும் கீழே கிடந்த கற்களை எடுத்து இளைஞர் மீது சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 20 முறைக்கும் மேல் இளைஞர்கள் மீது கற்கள் வீசப்பட்டதில் அவர் துடிதுடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கொலை செய்து விட்டு தப்பியோடிய 3 பெண்கள் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞரின் பெயர், பாலப்பா ஜம்காந்தி என்றும், பதாமி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் பாலப்பாவுக்கு, ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகவும், அது தொடர்பாக விசாரிக்க வந்த 6 பேருடன் தகராறு ஏற்பட்டு கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். வழக்குத் தொடர்பாக 3 பெண்கள் உள்பட ஆறு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற ஆறு பேரைத் தேடி வருகின்றனர்.

இளைஞர் கல்லால் அடித்துக் கொன்ற சிசிடிவி வெளியீடு

பெண்ணுடன் இருந்த தகாத உறவை முறித்துக் கொள்ள மறுத்த இளைஞர் கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ஸ்டாலின் நாமதேசியா..': அமைச்சர் சமஸ்கிருதத்தில் செய்த அர்ச்சனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.