தெலங்கானா மாநிலம் போச்சம்பாத்தில் கோதாவரி புஷ்கர் ஆறு அமைந்துள்ளது. இதில் படகு சவாரி செய்வதற்காக நிஜாமாபாத், மக்லூரே, நந்திபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பமாக சென்றுள்ளனர்.
அவர்கள் ஆற்றில் படகு சவாரி செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவன் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுவனை காப்பாற்ற உறவினர்கள் நீரில் இறங்கியுள்ளனர்.
இதையடுத்து நீரின் வேகம் திடீரென அதிகரித்த நிலையில், அனைவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மொத்தம் ஏழு பேர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், தத்தளித்துக்கொண்டிருந்த சிறுவனை உள்ளூர் வாசிகள் மீட்டனர்.
மூன்று சிறுவர்கள் உள்பட ஆறு பேர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் உடற்கூராய்வுக்காக பால்கொண்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டியூஷன் சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை?