ETV Bharat / bharat

ஆந்திராவில் பயங்கர தீ விபத்து; 6 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்! - ஆந்திராவில் பயங்கர தீ விபத்து

ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Fire
Fire
author img

By

Published : Apr 14, 2022, 8:30 AM IST

Updated : Apr 14, 2022, 9:11 AM IST

எலுரு: ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள அக்கிரெட்டிகூடம் போரஸ் தொழிற்சாலையில் புதன்கிழமை (ஏப்.13) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த ரசாயன ஆலையில் உள்ள 4ஆவது யூனிட்டில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 13 பேர் நுவேது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர்.

தீ விபத்து நடந்த தினத்தில் 150 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். சம்பவம் குறித்து பேசிய எலுரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

Last Updated : Apr 14, 2022, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.