பெங்களூரு: இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசின் நியமனத்திற்கான அமைச்சரவைக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தற்போது இந்த அறிவிப்பின்படி 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரது தலைமையின் கீழ், ககன்யான், சந்திராயன்-3 ஆகிய திட்டங்களுக்கானப் பணிகள் நடைபெற்று வருவதாலும், இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் எனும் தன்னாட்சி அமைப்பினை மேம்படுத்தவேண்டியுள்ளதாலும் அவரது பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: இன்-ஸ்பேஸ் தலைவர் பதவிக்கு 3 விண்வெளி மைய இயக்குநர்கள் பெயர்கள் பரிந்துரை