பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கரோனா மருத்துவ பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
44ஆவது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்புகளை மேற்கொண்டார்.
அதேப்போல், கரோனா பரிசோதனை கருவிகள், சானிடைசர்கள், மருத்துவ ஆக்ஸிஜன், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரெம்டிசிவிர் மருந்து உள்ளிட்ட பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள்
- ரெம்டிசிவிர் மருந்து, வென்டிலேட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் ஆகியவற்றின் ஜி.எஸ்.டி. 12% இல் இருந்து 5 ஆகக் குறைப்பு
- சானிடைசர், உடல் வெப்பநிலையைக் கணக்கிடும் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி. 18%இல் இருந்து 5%ஆகக் குறைப்பு
- ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 12%ஆகக் குறைப்பு
- கரோனா சிகிச்சைக்கான Tocilizumab மருந்துக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை
- பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை
இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்!