ETV Bharat / bharat

'பாவம், தாளம், ராகம்.. உள்ளவரை'- சீதாராம் யெச்சூரி இரங்கல்!

லதா மங்கேஷ்கரின் பாவம்.. தாளம்.. ராகம்... நாட்டில் என்றென்றும் நிலைத்திருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Sitaram Yechury
Sitaram Yechury
author img

By

Published : Feb 6, 2022, 12:33 PM IST

புதுடெல்லி : வயது முதிர்வு மற்றும் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த, கானக் குயில் மெலடி மகாராணி லதா மங்கேஷ்கர் இன்று (பிப்.6) காலை காலமானார்.

அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “லதா அவர்களின் பாவம், தாளம், ராகம் நாட்டில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

Sitaram Yechury mourns Lata Mangeshkars death
'பாவம், தாளம், ராகம் உள்ளவரை'- சீதாராம் யெச்சூரி இரங்கல்!

அவரை தலைமுறைகள் மரியாதையுடன் வணங்குகின்றன. அவருடைய குரலை எப்போதும் நம் இதயங்களில் சுமந்து செல்வோம். ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கர் வயது முதிர்வு பிரச்சினை மற்றும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் அவர் உயிர் இன்று பிரிந்தது. லதா மங்கேஷ்கர் தனது இளைய சகோதர சகோதரிகள் ஆஷா போன்லே, ஹிரிதயநாத், உமா, மீனா ஆகியோருடன் வசித்துவந்தார். இவர் 37க்கும் மேற்பட்ட மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : லதா மங்கேஷ்கர் மறைவுக்கு கனிமொழி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.