டெல்லி : நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,549 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விடுத்துள்ள புள்ளி விவர அறிக்கையில், “நாட்டில் இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க கரோனா பெருந்தொற்று வைரஸிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்து 106 ஆக குறைந்துள்ளது.
இதுவரை கரோனா வைரஸிற்கு 5 லட்சத்து 16 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோருடன் ஒப்பிடுகையில் நாட்டில் கோவிட் பரவல் 0.06 சதவீதம் ஆக உள்ளது. அதேநேரம் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மீள்வோர் விகிதம் 98.74 ஆக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இந்தியாவின் கோவிட்-19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7, 2020 அன்று 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும் தாண்டியது.
தொடர்ந்து, செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும் தாண்டியது. இந்நிலையில், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 இல் 90 லட்சத்தையும் கடந்தது, டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது.
இதையடுத்து கடந்த மே 4 ஆம் தேதி 2 கோடியாகவும், ஜூன் 23 ஆம் தேதி 3 கோடியாகவும் பாதிப்பாளர்கள் இருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையில் 620 பேர்!