ETV Bharat / bharat

டெல்லி கௌரவ ஆசிரியர்கள் தர்ணா: சீறிய சித்து, மௌனித்த கெஜ்ரிவால்!

author img

By

Published : Dec 5, 2021, 8:01 PM IST

டெல்லியில் கௌரவ ஆசிரியர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் கலந்துகொண்டார். அடுத்தாண்டு பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்தப் போராட்டம் கெஜ்ரிவாலுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Sidhu
Sidhu

டெல்லி : டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு கௌரவ ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, டெல்லியில் 22 ஆயிரம் கௌரவ ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் மாநில அரசால் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், “உங்கள் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலில் நிவர்த்தி செய்யுங்கள். அதன்பின்னர் பஞ்சாப் குறித்து பேசலாம்” என்றார்.

டெல்லி கௌரவ ஆசிரியர்கள் தர்ணா

முன்னதாக நவ.27ஆம் தேதி பஞ்சாப்பில் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், “பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி என்றும் துணை நிற்கும். பணி மாற்றத்தின்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்” என்றார்.

மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, நேரடியாக டெல்லி சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பே டெல்லி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.

அமரீந்தர் சிங்- சித்து பனிப்போர்

பொதுவாக சித்து அனைத்து தரப்பு அரசியல்வாதிகளையும் சாடிவருகிறார். அவர் சொந்தக் கட்சித் தலைவர்களையும் விட்டுவைப்பதில்லை. குற்றம், குறைகள் எதுவும் இருப்பின் நேரடியாக சொல்லிவிடுகிறார். அண்மையில் இவருக்கும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் நீடித்தது. தொடர்ந்து, கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை துறந்தார்.

இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சரான பட்டியலின பிரிவைச் சார்ந்த சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். அவரின் அமைச்சரவையில் சித்துவின் ஆள்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. கேப்டன் அமரீந்தர் சிங்கின் விருப்பத்துக்குரிய சகாக்களே முக்கியப் பொறுப்புகளை வகித்தனர். இதனால் அதிருப்திக்குள்ளான சித்து, கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்

எனினும் இவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் தலைவராகவே செயல்படுகிறார். இதற்கிடையில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனிக்கட்சி தொடங்கியுள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அவர் சிரோமணி அகாலிதளம் அல்லது பாஜகவுடன் இணைந்து போட்டியிடலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Sidhu takes potshots at Kerjriwal, joins teachers' dharna in front of his residence
டெல்லி கௌரவ ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்து

2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. 10 ஆண்டுகளாக இருந்த சிரோமணி அகாலிதளம், பாஜக அரசாங்கம் துடைதெறியப்பட்டது.

நான்காம் இடத்தில் பாஜக

மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 20 இடங்களை வென்று இரண்டாவது கட்சியாக விஸ்வரூபம் எடுத்தது. 15 இடங்களை பிடித்த சிரோமணி அகாலிதளம் மூன்றாம் இடத்தையும், 3 தொகுதிகளுடன் பாஜக நான்காம் இடத்துக்கும் தள்ளப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரி காலணிகளைத் துடைத்த முன்னாள் முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.