ETV Bharat / bharat

போதைப் பொருள் வழக்கு: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரருக்கு ஜாமீன் - Siddhant Kapoor drugs consumption case

போதைப் பொருள் உட்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

siddhant-kapoor-released-on-bail-after-arrest-over-drugs-consumption-charges

author img

By

Published : Jun 14, 2022, 1:04 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜூன் 12ஆம் தேதி தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் விருந்து நடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அதனடிப்படையில் ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூரும் ஒருவர். இந்த வழக்கை பெங்களூரு நகர கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே சித்தாந்த் கபூர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரியிருந்தனர். அதன்படி 5 பேருக்கும் இன்று (ஜூன் 14) ஸ்டேஷன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதோடு தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.