ETV Bharat / bharat

Karnataka CM : சித்தராமையா எனும் நான்.... கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்! - DK shivakumar Take Oath as Karntaka Deputy CM

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டார்.

karnataka
karnataka
author img

By

Published : May 20, 2023, 12:54 PM IST

Updated : May 20, 2023, 2:09 PM IST

பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து மே. 13ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றியது. பாஜக 66 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களையும் கைப்பற்றின.

கல்யான ராஜ்ய பிரகதி பக்சா மற்றும் சர்வோதய கர்நாடக் பக்சா ஆகிய கட்சிகள் தலா 1 இடத்த்தில் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். ஆட்சி அமைக்க 113 இடங்களே தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தாலும் முதலமைச்சரை தேர்வு செய்வது என்பது அந்த கட்சிக்கு எளிதாக அமையவில்லை. சட்டமன்றக் குழு கூடி முதலமைச்சரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், தலைகீழ் நிலையாக மாறி முடிவு எட்டப்படாத சூழல் உருவானது.

மேலும் சட்டமன்றக் குழு முதலமைச்சரை தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் கர்நாடக முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி மல்லிகார்ஜூன கார்கேவின் தலையில் வந்து விழுந்தது. ஏறத்தாழ 4 நாட்கள் முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்தது.

முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் தலைநகர் டெல்லி சென்று, காங்கிரஸ் மேலிடத்தை சந்தித்து தனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டியதற்காக காரணிகளை கூறினர். மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் டெல்லி இல்லத்தில் வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இறுதியில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சி மேலிடம் ஒருவழியாக டி.கே. சிவகுமாரை சமாதானம் செய்து சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்தது. மேலும் கட்சியின் மேல் உள்ள விருப்பத்தினால் துணை முதலமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டதாக டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த மே. 19) முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா, மற்றும் துணை முதலமைச்சர் வேட்பாளர் டி.கே. சிவகுமார் தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்திடம் கடும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அமைச்சரவை அமைப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் இணைந்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே. 20) கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. பெங்களூருவில் உள்ள கண்டீவரா மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்றன. பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட சித்தரமையா தொடர்ந்து ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி மற்றும் ரகசிய காப்பு பிரமானம் செய்து வைத்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே சிவகுமாருக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோரை தொடர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடக அமைச்சர்களாக பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமது கான் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல், இமாச்சல முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரக்கணக்கிலான மக்கள் விழாவில் கலந்து கொண்டு உற்சாகமூட்டினர்.

இதையும் படிங்க : Live: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன் பங்கேற்பு!

Last Updated : May 20, 2023, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.