மும்பை : சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் மரணத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் மரணம் என்ற தலைப்பில் நாளேட்டில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. அதில், லக்கிம்பூர் கேரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌமான இருப்பது ஏன் என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
அந்த தலையங்கத்தில், “நாட்டில் நான்கு தூண்களும் அச்சுறுத்தப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துவருகின்றன. ஜனநாயகம் குறித்த கவலை எழுந்துள்ளது.
பொதுவாக பிரதமர் மக்களின் வலி மற்றும் கவலைகள் குறித்து புரிந்துகொள்வார். இதை மக்களும் பலமுறை கண்டுள்ளனர். மக்களின் வலி, வேதனைக்காக பொதுவெளியில் கூட பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் வடிப்பார்.
மௌனம்
ஆகையால், இந்த விவகாரத்தில் (லக்கிம்பூர் கேரி விவசாயிகள் மரணம்) பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் நசுங்கி கொல்லப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள், விவசாயத் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் என யாரும் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. விவசாயிகளை கொல்வது, ஒடுக்குவது எந்த வகையில் நியாயம்.
குற்றச்சாட்டு
இதுவே வேறொரு மாநிலத்தில் அமைச்சர் அல்லது அவர் மகன் செய்திருந்தால் பாஜக இதை மிகப்பெரிய பிரச்சினை ஆக்கியிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடந்தது என்ன?
உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர். கோபமடைந்த விவசாயிகளால் இரண்டு சொகுசு கார்கள் தீவைக்கப்பட்டன.
இறந்தவர்களில் நான்கு பேர் வாகனங்களில் பயணம் செய்ததாகவும், மீதமுள்ள இருவர் விவசாயிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் நடத்திய விவசாயிகளின் கூற்றுப்படி, ஒன்றிய அமைச்சரின் மகன் விவசாய எதிர்ப்பு சட்ட எதிர்ப்பாளர்கள் மீது தனது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 'ஒரு மணி நேரத்தில் முடிச்சிடுவேன்'- ஒன்றிய அமைச்சருக்கு சிவசேனா எம்எல்ஏ மிரட்டல்