மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே புதன்கிழமை இரவு (மே11) மாரடைப்பால் காலமானார். 52வயதுடைய இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் ஷாப்பிங் சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு எம்எல்ஏ ரமேஷ லட்கே உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அனில் பராப், “நாங்கள் இப்போது அவரது உடலைப் பெற முயற்சிசெய்து வருகின்றோம்” என்றார்.
காங்கிரஸின் சுரேஷ் ஷெட்டியை தோற்கடித்த லட்கே, 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அந்தேரி கிழக்கிலிருந்து மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது அவர் சுயேச்சை வேட்பாளரான எம். படேலை தோற்கடித்தார். முன்னதாக, 2002 மற்றும் 2009இல் நடந்த நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமுகை வனப்பகுதியில் யானை உயிரிழப்பு