மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவில் பாஜகவின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் ஷிண்டே அரசு மக்களை கவரும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
தற்போதைய நிலையில் சாதாரண மக்களின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான "வாட்" என்ற மதிப்புக் கூட்டு வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, வாட் வரி குறைப்பால், பெட்ரோல் விலையில் 5 ரூபாயும், டீசல் விலையில் 3 ரூபாயும் குறையும் என்றும், இந்த வரி குறைப்பால் மாநிலத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து - 12 பேர் படுகாயம்!