ETV Bharat / bharat

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்..? தொடங்கிய வேட்புமனு தாக்கல்..! - ஒரு நபர்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

Etv Bharatகாங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? வேட்புமனுக்களை சேகரித்த சசி தரூர்

author img

By

Published : Sep 24, 2022, 5:25 PM IST

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.24) தொடங்கியது. செப்.30ஆம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக். 1ஆம் தேதியும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது அக்.8ஆம் தேதியும் நடக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப் பதிவு அக்.17ஆம் தேதி நடைபெறும்.

அந்த வாக்குகள் அக்.19ஆம் தேதி எண்ணப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்று நேரு குடும்பம் உறுதியாக தெரிவித்துவிட்டது. குறிப்பாக தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து, இனி காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதமைச்சர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். அவருக்கு எதிராக திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் போட்டியிட உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் சசி தரூர் தரப்பு எதுவும் தெரிவிக்க வில்லை. இந்த நிலையில் சசி தரூர் இன்று (செப் 24) காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து தலைவர் பதவிக்கான வேட்பு மனுக்களை பெற்றுள்ளார். இதன் மூலம் அசோக் கெலாட்டுக்கு எதிராக சசி தரூர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 24 ஆண்டுகளுக்கு பின் தலைவர் பதவிக்கான போட்டியைக் காண உள்ளது. குறிப்பாக நேரு குடும்பத்தை தவிர்த்து தேர்தல் நடக்கிறது. முன்னதாக சசி தரூர் செப். 19ஆம் தேதி சோனியா காந்தியை சந்தித்தார். இருப்பினும் அசோக் கொலட்டிற்கே சோனியா காந்தியின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் அக்.2ஆம் தேதி முதல் மின்சார ரயில் சேவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.