ETV Bharat / bharat

பாரம்பரிய ஊஞ்சலில் ஆடி ஓணம் கொண்டாடிய சசி தரூர் எம்பி! - சசி தரூர்

திருவனந்தபுரம் எம்.பி சசி தரூர், இன்று தனது குடும்பத்துடன் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார்.

Shashi Tharoor
Shashi Tharoor
author img

By

Published : Aug 21, 2021, 2:25 PM IST

உலகம் முழுவதும் உள்ள கேரள மக்கள் இன்று (ஆக.21) ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இன்று தனது குடும்பத்துடன் கேரளாவின் பாலக்காட்டில் உள்ள தனது மூதாதையர் வீட்டில் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

பாரம்பரிய ஊஞ்சல் ஆடி ஓணம் கொண்டாட்டம்

மேலும் தன் வீட்டின் முற்றத்தில் உள்ள பாரம்பரிய ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் ஆடியபடி காணொலி ஒன்றையும் சசி தரூர் பகிர்ந்துள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 18ஆம் தேதி, மறைந்த தனது மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து சசி தரூர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அவர் பகிர்ந்துள்ள பதிவில், "பாரம்பரிய ஓணம் ஊஞ்சல் பொதுவாக இளம்பெண்களுக்கானது. ஆனால் இந்த ஆண்டு நானும் இவற்றை செய்வதற்காக வற்புறுத்தப்பட்டுள்ளேன். அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • There’s an Onam swing tradition that one normally leaves to young girls. I was persuaded to get Into the spirit of things this year. Happy Onam! pic.twitter.com/Z23nJ9Fmfp

    — Shashi Tharoor (@ShashiTharoor) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக ஓணம் குறித்து மற்றொரு பதிவையும் பகிர்ந்திருந்த சசி தரூர், அதில் ஓணம் குறித்தும், தனது குழந்தைப் பருவம், பாலக்காட்டின் எலவாஞ்சேரி கிராமத்தில் உள்ள தன் மூதாதையர் வீடு, ஆகஸ்ட் 2010ஆம் ஆண்டு சுனந்தா புஷ்கரை திருமணம் செய்த இடம் ஆகியவற்றைப் பற்றியும் நினைவுகூர்ந்திருந்தார்.

ஓணம் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்

இந்தியா முழுவதும் உள்ள கேரள மக்களுக்கு ட்விட்டர் மூலம் ஓணம் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ஓணம் நேர்மறை எண்ணங்கள், உற்சாகம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய திருவிழா எனப் புகழ்ந்திருந்தார்.

  • Best wishes on the special occasion of Onam, a festival associated with positivity, vibrancy, brotherhood and harmony. I pray for everyone's good health and wellbeing.

    — Narendra Modi (@narendramodi) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

  • Onam greetings to all our fellow citizens! This festival is a celebration of the new harvest. It highlights the tireless work of farmers. It is an occasion to express gratitude to mother nature. I wish progress and prosperity for all fellow citizens.

    — President of India (@rashtrapatibhvn) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஓணம் பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மன்னர் இந்தப் பூமிக்கு வருகைதரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்நாள், கேரள மக்களின் அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

மக்கள் தங்கள் வீடுகளையும் தெருக்களையும் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையின்போது அலங்கரிப்பர். ஆண்டுதோறும் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்கள் ஓணம் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

சாதி, மத பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ள மலையாள மொழி பேசிடும் அனைத்து மக்களாலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காணொலி வாயிலாகக் கொண்டாட்டம்

இந்தியாவிலேயே அதிக கரோனா வழக்குகள் பதிவாகும் மாநிலமாக கேரளா தற்போது உள்ள நிலையில், இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் அனைத்தும் மெய்நிகர் முறையிலேயே நடந்து வருகின்றன.

நேற்று (ஆக.20) மட்டும் கேரளாவில் மொத்தம் 20,224 நபர்கள் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 99 நபர்கள் உயிரிழந்தனர். இதுவரை கேரளாவில் மொத்தம் 37,86,797 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,345 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: மக்களைக் காண பாதாளத்திலிருந்து பூலோகம் வரும் மகாபலி - ஓணம் வரலாறு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.