இந்தியாவின் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (நவம்பர் 30) நடைபெற்றது. இந்த விருதுகளை குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறையின் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழ்நாட்டின் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வழங்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாட்டின் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில், சீமா புனியா (தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), எச்எஸ் பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), ஆர் பிரக்ஞானந்தா (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி), நயன் மோனி சைகியா (லவ்ன் பௌல்), சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லர் கம்பம்), இளவேனில் வளரிவன் (துப்பாக்கி சுடுதல்), ஓம்பிரகாஷ் மிதர்வால் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன் (உஷ), மானசி கிரிஷ்சந்திர ஜோஷி (பாரா பேட்மிண்டன்), தருண் தில்லன் (பாரா பேட்மிண்டன்), ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல்), ஜெர்லின் அனிகா ஜே (காது கேளாதோர் பேட்மிண்டன்) ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
அதேபோல விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. துரோணாச்சார்யா விருதின் வாழ்நாள் பிரிவில், தினேஷ் ஜவஹர் லாட் (கிரிக்கெட்), பிமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து), ராஜ் சிங் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது, அஸ்வினி அக்குஞ்சி சி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), பி சி சுரேஷ் (கபடி), நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: IND vs NZ: ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து