டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினரமான சரத் பவார் நேற்று (ஜூலை 17) டெல்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை.19) நடைபெறவுள்ள நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதற்கு முன்னர் வெள்ளிக்கிழமை, புதிதாக நியமிக்கப்பட்ட மாநிலங்களவைத் தலைவர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என்சிபி தலைவர் சரத் பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ஆகியோருடன் கலந்துரையாடினர்.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம்
முன்னதாக சரத் பவார் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், "கூட்டுறவு வங்கிகளின் வைப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், தொழில் திறனை அதிகரிப்பதன் மூலம் கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்தவும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட சட்டம் கூட்டுறவு சட்டத்தின் பல்வேறு விதிகளை மீறுகிறது. அவை,
- வாரியம் அமைத்தல்
- தலைவரைத் தேர்ந்தெடுப்பது
- நிர்வாக இயக்குநரை நியமித்தல் போன்றவை.
குறைதீர்ப்பு வாரியம் மற்றும் மேலாண்மை கண்டிப்பாக செயல்பட வேண்டும். வைப்பாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்" என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மும்பையில் கனமழை: சுவர் இடிந்து 25 பேர் உயிரிழப்பு!'