புது டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கட்சியின் ஆண்டுவிழாவில் எம்.பி சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சிறுபான்மையினரிடம் பாஜக பயங்கரவாதத்தை உருவாக்குகிறது. பாஜக ஆட்சியை தவறாக பயன்படுத்துகிறது. ஆளும் கட்சி மதவெறியை பரப்புகிறது என்று விமர்சித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 25வது ஆண்டு விழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) 10 ஜூன் 1999 அன்று உருவாக்கப்பட்டதில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த குறுகிய காலத்திலேயே இந்திய தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது. இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை அடைந்த முதல் கட்சி என்ற பெருமையை தேசியவாத காங்கிரஸ் பெற்றது.
கட்சியின் ஆண்டுவிழா நிகழ்வின் போது, சுனில் தட்கரேவுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் பொறுப்புகள் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் என்சிபியின் ராஜ்யசபா எம்பிக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சுலே மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேதல் பொறுப்பாளராகவும், மக்களவை தேர்தலின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் எனவும், இளைஞர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பாளராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பின் சுப்ரியா சுலே அவரது ட்விட்டர் பக்கத்தில், “என்சிபி தலைவருக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். அனைத்து மூத்த தலைவர்கள், கட்சி சகாக்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகள், எனது சக உறுப்பினர்கள் அனைவரோடும் இணைந்து விடாமுயற்சியுடன் கட்சியின் முன்னேற்றத்திற்கு பணியாற்றுவேன், மேலும் மக்களின் நன்மைக்காக நாங்கள் கூட்டாக தேசத்திற்கு சேவை செய்வோம்” என பதிவிட்டு உள்ளார்.
-
I am grateful to NCP President Hon. Pawar Saheb and all the Senior Leaders, party colleagues, party workers and well wishers of @NCPSpeaks for bestowing this huge responsibility of Working President along with Hon. @praful_patel Bhai.
— Supriya Sule (@supriya_sule) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
To my fellow members of the party, because…
">I am grateful to NCP President Hon. Pawar Saheb and all the Senior Leaders, party colleagues, party workers and well wishers of @NCPSpeaks for bestowing this huge responsibility of Working President along with Hon. @praful_patel Bhai.
— Supriya Sule (@supriya_sule) June 10, 2023
To my fellow members of the party, because…I am grateful to NCP President Hon. Pawar Saheb and all the Senior Leaders, party colleagues, party workers and well wishers of @NCPSpeaks for bestowing this huge responsibility of Working President along with Hon. @praful_patel Bhai.
— Supriya Sule (@supriya_sule) June 10, 2023
To my fellow members of the party, because…
முன்னதாக தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார் தனது சுயசரிதை வெளியீட்டின் போது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
ஆனாலும் கட்சிக்குத் தலைமை தேவை என்பதை அறிவித்தார். இதற்காக தனிக்கமிட்டி ஒன்றையும் நியமித்திருந்தார். அந்தக் கமிட்டிதான் சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரித்தது. அதே சமயம் அவர் ராஜினாமாவைத் திரும்பப் பெறவில்லையெனில் சுப்ரியா சுலேவை செயல் தலைவராகவும், அஜித் பவாரை மாநில பொறுப்பைக் கவனிக்கவும் நியமிக்கலாம் என மாற்றுத்திட்டத்தையும் சரத் பவாரிடம் கொடுத்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சுப்ரியா சுலேயும், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேலும் செயல் தலைவர்களாக சரத் பவார் அறிவித்து உள்ளார். மேலும் அஜித் பவாருக்கும் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அஜித் பவார் அவரது ஆதரவாளர்கள் உடன் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Maharashtra: சரத் பவார், சஞ்சய் ராவத் எம்.பிக்கு கொலை மிரட்டல்!