ETV Bharat / bharat

அடுத்த பிரதமர் நானா? சரத் பவார் கொடுத்த விளக்கம்!

author img

By

Published : May 23, 2023, 9:38 AM IST

புனேவில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், ராகுல் காந்தியின் சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள் - சரத் பவார்

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேயில் புனே பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராம் தகவாலே சமீபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில், அதற்கான இரங்கல் கூட்டம் புனேயில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “நாட்டின் முனேற்றத்திற்காக உழைக்கும் தலைமையை எதிர்கட்சிகள் விரும்புகிறது.

நான், எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக இல்லை. வருகிற மக்களைவைத் தேர்தலில் எதிர்கட்சி தரப்பு வெல்லும் நிலையில், பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணியை எதிர்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நான் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறேன். வருகிற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதால், பிரதமர் வேட்பாளர் பரிந்துரையில் நான் இல்லை. சமீபத்தில் எனது இல்லத்தில் வைத்து ஒரு கூட்டம் நடைபெற்றது.

விரைவில் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மஹா விகாஷ் அகாடியின் தலைவர்கள் ஒரு முடிவினை எடுப்பார்கள். இது குறித்து உத்தவ் தாக்கரே, சோனியா காந்தி அல்லது இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் நான் உள்பட சில தலைவர்கள் விவாதிக்க உள்ளாம். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பாத யாத்திரை, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தது ஒரு சிறந்த உதாரணம்.

இதையும் படிங்க : ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்.. ஐந்துமே பெண் குழந்தைகள்... எப்புடி!

முன்னாள் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் சித்தாந்தத்தை மக்கள் வலுப்படுத்துவார்கள். ராகுல் காந்தியைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அவரின் சித்தாந்தத்தை மக்கள் நிச்சயமாக வலுப்படுத்துவார்கள்" என தெரிவித்தார். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சர்த் பவார் அறிவித்தார்.

அடுத்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவாரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே அல்லது அஜித் பவார் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது. அதேநேரம் சரத் பவார் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைவரை பதவியை ராஜினாமா செய்ததை சரத் பவார் திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: உத்தவ் தாக்ரே - சரத் பவார் - நிதிஷ் குமார் சந்திப்பு - பாஜகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.