ETV Bharat / bharat

பூஜை எனக்கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தெலங்கனாவில் நிகழ்ந்த பகீர் சம்பவம்.. வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? - பூஜை வழிபாடு

தெலங்கானா மாநிலத்தில் பேய் விரட்ட வழிபாடு என்ற பெயரில் போலி சாமியார் ஒருவர் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 5:12 PM IST

Updated : Sep 1, 2023, 11:53 AM IST

கேசவகிரி: தெலங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தில் பேய்களை விரட்டுவதாக கூறி திருமணமான இளம்பெண் ஒருவரை போலி சாமியார் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் கால தாமதமாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டிய நிலையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 21 வயதான இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணமான சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறிய நிலையில் அவர் தனது மனைவி தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என சந்தேகம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தனது தாய் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் முதலில் பர்கத்புராவில் உள்ள சாமியார் ஒருவரிடம் தனது மனைவியை அழைத்துச் சென்று பூஜை வழிபாடு மேற்கொண்டுள்ளார்.

ஆனால் அதில் எவ்வித மாற்றமும் இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், இரண்டாவது முறையாக பழைய பஸ்தி பந்தலகுடா ரஹ்மத்நகரில் உள்ள தந்திரிக் மசார் கான் (30) என்பவரிடம் கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் பேய் விரட்டுவதற்காக அந்த இளம்பெண்ணை அவரது கணவர் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் மீது ஐந்து பேய்கள் இருப்பதாகவும் அதை விரட்டச் சிறப்புப் பூஜை வழிபாடு மேற்கொள்ள வேண்டும் எனவும் தந்திரிக் மசார் கான் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் வீட்டிற்கு வருகை தந்த போலி சாமியார் மசார் கான், வீட்டை ஆய்வு செய்து விட்டுப் பின்னர் தனது வீட்டிற்கு அந்த இளம் பெண்ணை அழைத்து வரும் படி அவரின் கணவரிடம் கூறியுள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த பெண்ணை அவரின் கணவர் அங்கு அழைத்துச் சென்ற நிலையில் ஒரு அறையில் வைத்துப் பெண்ணின் கண்களில் துணியைக் கட்டுமாறும், இடுப்பில் ஒரு மாந்திரீக நூலைக் கட்டுமாறும் அவரின் கணவரிடம் அந்த சாமியார் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த கணவரின் காலில் விழுந்து வணங்கிய போலி சாமியார் அவரை அறையில் இருந்து வெளியே போகும்படி ஆணையிட்டுள்ளார்.

தனது மனைவிக்குப் பேய்தான் ஓட்டப் போகிறார் என நம்பி கணவர் வெளியே சென்ற நிலையில் அந்த இளம் பெண்ணை போலி சாமியார் மசார் கான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை பசும்பால் தண்ணீரால் குளிப்பாட்டிய அந்த சாமியார் இங்கு நடந்த இந்த பூஜை குறித்து வெளியே சொல்ல வேண்டாம் எனவும் அப்படிச் சொன்னால் பூஜை பலிக்காது எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இளம் பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கணவரிடமும், பெற்றோரிடமும் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர்கள் அந்த பெண்ணை வீட்டிற்குள் வைத்து பத்து நாட்கள் பூட்டியுள்ளனர். பத்து நாட்களுக்குப் பிறகு அந்த பெண்ணின் சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரிடம் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறிய நிலையில், சகோதரியின் உதவியோடு பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தகவல் அறிந்த போலி சாமியார் மசார் கான் மகாராஷ்டிராவுக்குத் தப்பிச் சென்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ம.பி.யில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Last Updated : Sep 1, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.