உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள சம்பவத் மாவட்டத்தில் நேற்று இரவு பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தனக்பூர் பஞ்சமுகி தரம்சாலாவில் உள்ள கக்கானாய் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மண் சிங். இவரின் மகன் மனோஜ் சிங். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களின் உறவினர்கள் காரில் சென்றனர். உறவினர் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டு அதே வாகத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது,மாலை 3 மணியளவில் கார் கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள ஆழமான பள்ளதாக்கில் விழுந்தது.இதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் லட்சுமண் சிங்கின் உறவினர்கள் என கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அறிந்த காவல் மற்றும் மீட்புப்படையினர் பள்ளதாக்கில் விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.